தோல் மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகைகள், பணம் திருடிய உதவியாளர்..

ஈரோட்டில் தோல் மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவரது உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் தோல் மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவரது உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெருந்துறை சாலை பகுதியில் வசித்து வரும் மருத்துவர் விஷ்ணு தீபக், தனது வீட்டின் அருகே மருத்துவமனை வைத்துள்ளார். அவர் 22ம் தேதி பெரம்பலூர் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருடு போயிருந்ததை அடுத்து ஜிஎச் போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடனும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் சோதனை செய்த போலீசார் நகைகளை திருடியது மருத்துவரின் உதவியாளர் வசந்த் மற்றும் அவரது 3 நண்பர்கள் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.
Comments