நிலத்தை சேதப்படுத்தியதால் ஆத்திரம்.. யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்..

0 2170
கர்நாடகாவில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கோர்கிஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அரஹள்ளி வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

உயிரிழந்தது 15 வயதுடைய ஆண் யானை எனவும், துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நிலத்தை சேதப்படுத்தியதால் விவசாய தோட்டத்தின் உரிமையாளர் சையத் சித்தார், தான் சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்த நாட்டு துப்பாக்கியால் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments