டெஸ்லா கார் விற்பனைக்கு அனுமதி கிடைக்காத இடத்தில் உற்பத்தி மையம் தொடங்கப்போவதில்லை - எலன் மஸ்க்

0 2131
டெஸ்லா கார் விற்பனைக்கு அனுமதி கிடைக்காத இடத்தில் உற்பத்தி மையம் தொடங்கப்போவதில்லை - எலன் மஸ்க்

இந்தியாவில், டெஸ்லா மின்சார கார் விற்பனையைத் தொடங்க அனுமதிக்காததால், அதன் உற்பத்தி மையத்தை தொடங்கப்போவதில்லை என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், டெஸ்லா மின்சார காரின் உற்பத்தி மையம் தொடங்குவது குறித்து டிவிட்டர் பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலன் மஸ்க், காரின் விற்பனை மற்றும் சேவைக்கு முதலில் அனுமதி கிடைக்காத நிலையில், அதன் உற்பத்தி மையத்தை அமைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

டெஸ்லா காரை இந்தியாவில் உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதன் விற்பனை, வரி குறைப்புக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments