நின்னகரை ஏரிக்கு பறவைகள் வரத்து அதிகரிப்பு.. நாமக்கோழி, கிரேஸ், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் வருகை..!

நின்னகரை ஏரிக்கு பறவைகள் வரத்து அதிகரிப்பு.. நாமக்கோழி, கிரேஸ், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் வருகை..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நின்னகரை ஏரிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. எனினும், போதிய மரங்கள் இல்லாததால் அவை உயர்மின்னழுத்த கோபுரத்தில் நெருக்கமாக அமர்ந்து இளைப்பாறுகின்றன.
இதனால் ஏரி பகுதியில் நிறைய மரங்களை நட்டு, ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments