சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன் பாறை மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி.!

0 1475

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில-மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த முகமது பாஷா மற்றும் அவரது உறவினர் உள்ளிட்ட 14 பேர் ஏற்காட்டிற்கு சென்று குப்பனூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

கொட்டச்சேடு முனியப்பன் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments