இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கும் பண்டி பார்த்தசாரதி.. சொத்து மதிப்பு ரூ.3909 கோடி என வேட்பு மனுவில் தகவல்..!

0 2765

ஹைதராபாத்தை சேர்ந்த ஹிடேரோ (hetero)மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி (Bandi Partha Saradhi), இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கிறார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3909 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டி பார்த்த சாரதியின் பெரும்பாலான சொத்துக்கள் ஹிடேரோ குழும பங்குகள் மற்றும் முதலீடுகளாக இருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments