10 நாயகிகளுடன் அண்ணாச்சியின் அதகளமான ஆட்டம்.. பான் இந்தியா படமானது தி லெஜெண்ட்..!

0 3558

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா என 5 மொழிகளில் நடித்துள்ள பிரபல நாயகிகள் 10 பேருடன் அண்ணாச்சியின் அதகளமான ஆட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள தி லெஜண்ட் படத்தின்2 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை குறுகிய நாட்களில் பெற்றுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாய் தயாராகி இருக்கும் தி லெஜண்ட் படத்தை பான் இந்தியா படமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர் , அந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக வருகின்ற 29 ந்தேதி நேரு  உள் விளையாட்டு அரங்கில் இந்த படத்திற்கான பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர்.

இந்த விழாவில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சினிமா முன்னனி கதாநாயகிகள் பங்கேற்க உள்ளனர். பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ராவ்டேலா, லட்சுமிராய், யாஷிகா உள்ளிட்ட 10 நாயகிகள் பங்கேற்று லெஜண்ட் சரவணனுடன் மேடையில் ஆட்டம் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் தனது கடையின் விளம்பர படத்தில் தமன்னா, ஹன்சிகாவுடன் 10 நொடி ஆட்டம் போட்ட அண்ணாச்சி சரவணன், தற்போது 10 நாயகிகளுடன் மேடையில் ஆட்டம் போடும் அளவிற்கு பான் இந்தியா ஸ்டாராக தன்னை தானே செதுக்கி இருப்பது குறிப்பிடக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments