சாலை தடுப்பில் மோதிய பைக்கில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளைஞர்.. லாரி ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி..

0 1620

சென்னை அடுத்த அம்பத்தூரில், சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளைஞர், அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லொலன் ராணா, அம்பத்தூரில் பணியாற்றி வந்துள்ளார். நண்பருடன் பெட்ரோல் பங்க் வந்த அவர், பெட்ரோல் நிரப்பி விட்டு கிளம்பும் போது வேகமாக accelerator-ஐ முறுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே இருந்த சாலை தடுப்பில் மோதி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியதால், நண்பர் கண் எதிரிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments