போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

0 1641

பிரேசிலில், கருப்பினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு போலீசாரால் கொல்லப்பட்ட நிகழ்வு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் அம்பாஉபா நகரில், ஜீசஸ் சாண்டோஸ் (Genivaldo de Jesus Santos) என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, பெடரல் போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாண்டோஸ் மீது தாக்குதல் நடத்திய போலீசார் பின்னர், அவரை காரின் பின்பக்கத்தில் அடைத்து வைத்து கண்ணீர் புகையை செலுத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க சாண்டோஸ் மறுப்பு தெரிவித்தபோது, போலீசார் அவரை கட்டுப்படுத்த இதுபோன்று செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments