கடைகோடி வரை திட்டங்களின் பயன்.. தொழில் நுட்பத்தால் சாதிக்கும் அரசு..!

0 1866

நவீன தொழில் நுட்பங்களின் மூலம் அரசு திட்டங்களின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இரு நாட்கள் நடைபெறும் தேசிய டிரோன் மகா உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டிரோன் தொழில் நுட்பம் குறித்த நாட்டு மக்களின் ஆர்வம் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது என்றார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில் துறைகளில் ஒன்றாக டிரோன் துறை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசு நலத்திட்டத்தின் பயன் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் சென்று சேர, தொழில் நுட்பம் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையிலும், பேரிடர் மேலாண்மையிலும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மாதம் தோறும் அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறிய பிரதமர், டிரோன்கள் மூலம் இந்த பணிக்கான ஆய்வை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடைபெறும் வளர்ச்சி பணிகளை டிரோன்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பின்னர் அவர் விவசாய பணிகளுக்கு உதவும் டிரோன்களை இயக்குவோருடன் கலந்துரையாடினார். டிரோன் இயக்குவோர், டிரோன் தயாரிக்கும் புத்தொழில் நிறுவனத்தினருடனும் அவர் கலந்துரையாடினார். 

டெல்லி பிரகதி மைதானத்தில் டிரோன் திருவிழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரிமோட் மூலம் டிரோனை இயக்கிப் பறக்கச் செய்ததுடன் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments