கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்குடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

0 2643
கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்குடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ஆற்றின் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி குழியில் பைக்குடன் நிலைத்தடுமாறி விழுந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், நேற்றிரவு ஆலத்தம்பாடி ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில், பைக்குடன் தலைக்கீழாக கீழே விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்த ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளம் தோண்டிய இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக கட்டுமான பணி ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments