மதுரையில் உரிய பராமரிப்பு இன்றி வளர்த்து வந்த யானையை பறிமுதல்செய்த வனத்துறையினர்.!

0 1932

மதுரையில் முறையாக அனுமதி பெறாமலும், உரிய பராமரிப்பு இன்றியும் தனிநபர் வளர்த்து வந்த யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கமலா நகரை சேர்ந்த மாலா என்பவர் தனது வளர்ப்பு பெண்யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து, அவர் யானை வளர்க்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து மாலா நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் அவர் யானை வாங்கியது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் சூழலில் நேற்று மாலாவின் வீட்டிற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் யானைக்கு உரிய பராமரிப்பு இல்லாததாக கூறி அதனை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments