5 வயதில் 5 மாணவிகள் 5 வித திறமைகளை காட்டி சாதனை.!

0 1959

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் 5 வயது நிரம்பிய 5 மாணவிகள் 5 விதமான திறமைகளை வெளிக்காட்டி சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

இப்பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் தமிழினியாள் என்ற சிறுமி திருக்குறளில் இடம்பெற்றுள்ள 100 வார்த்தைகளுக்கு தற்போது அதன் பொருள் குறித்து ஒரு நிமிடம் 20 வினாடிகளில் கூறினார்.

மிஸ்பா சரின் என்ற சிறுமி ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள் மட்டும் எழுதப்பட்டிருந்த 100 பொருட்களின் பெயர்களை நான்கு நிமிடங்களில் கூறினார்.

இகோனா என்ற மாணவி 100 ஆங்கில வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதப்பட்டு இருந்ததை சரியாக மூன்று நிமிடம் 44 விநாடிகளில் கூறினார்.

அனன்யா என்ற சிறுமி ஆங்கில வார்த்தையில் உள்ள எழுத்துகளுக்கு அதன் ஆங்கில எண்களை கூறி அசத்தினார். தனு ஸ்ரீ என்ற மாணவி தரப்பட்டிருந்த எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துகளை சரியாக எழுதினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments