நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை கேரள முதலமைச்சரை சந்தித்து உதவி கோரினார்.!

0 2623

நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல தமிழ் மற்றும் மலையாளப் பட நடிகை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டார்.

தற்போது 35 வயதான அந்த நடிகை 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொச்சி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பினராயி விஜயனை 15 நிமிடங்கள் சந்தித்து தமது நிலைமையை விளக்கிய நடிகைக்கு அரசு உதவும் என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாக நடிகை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல்துறை ஆணையரை அழைத்த பினராயி விஜயன் நடிகைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments