20 அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்த குழந்தை... பாய்ந்து குதித்து காப்பாற்றிய தாய்.!

0 2279

இங்கிலாந்து நாட்டின் Kent கவுண்டி பகுதியில் 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை அதன் தாய் பாய்ந்து சென்று குதித்து காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

23 வயதான Amy Blyth என்ற இளம்பெண் தனது 18 மாத குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது அந்த குழந்தை எதிர்பாராதவிதமாக வழியில் இருந்த 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது.

இதனைக் கண்ட அந்த தாய் அதிர்ச்சி அடைந்து பாய்ந்து சென்று கால்வாயில் குதித்து அந்த குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தார்.

இந்த சம்பவம் யாவும் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments