கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.!

0 2584

கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கொப்பல் அருகே, ஆனேகுந்தி கிராமத்தில் சாலையோர தாபா ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு 4 பேர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நிலையில், அங்குள்ள ஊழியர்கள் உணவு இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் ஹோட்டல் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

அந்த ஊழியர்கள் ஊர் மக்கள் உதவியுடன் காப்பற்றப்பட்ட நிலையில், கொப்பல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments