விருத்தாசலத்தில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது.!

0 3218

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கார்மாங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவனும், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள ஸ்ரீதர் விருப்பம் தெரிவித்த போது, அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், பேச வேண்டுமெனக் கூறி அந்த பெண்ணை வெள்ளாற்றங்கரைக்கு அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியல், கற்களால் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அச்சமயம் அவ்வழியாக விவசாயி ஒருவர் வருவதைக் கண்டதும் ஸ்ரீதர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், நெய்வேலியில் வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments