மது குடிக்க பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடியை கட்டையால் கொடூரமாக தாக்கிய தந்தை, மகன்

0 4472

நாகை வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் மது குடிக்க பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்ட ரவுடியை, கொடூரமாக தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

பொய்கைநல்லூரைச் சேர்ந்த ரவுடி நடவண்டி மோகன், பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் தந்தை மகனான மாரிமுத்து, மதியழகன் ஆகியோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த இருவரும், ரவுடி  நடவண்டிமோகனை கட்டையால் கொடூரமாக தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments