காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

0 2465

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments