9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம்

0 2071

சென்னை கொளத்தூரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 9 ஜோடிகளுக்கும் 33 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தனது திருமணத்திற்கு காமராசர் நேரில் வந்து வாழ்த்தியதாகக் கூறி நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments