ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை -சென்னை காவல் ஆணையர்

0 7994
ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை -சென்னை காவல் ஆணையர்

சென்னையில், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விகடன் குழுமத்தின் நிர்வாகிகளுடன் நெருக்கமானவர் எனக் கூறி மிரட்டி, பணம் கேட்ட சம்பவத்தில் ஜூவி பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments