இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி..! வீட்டில் சமைத்தாலும் கவனம் தேவை..!

0 4410
இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி..! வீட்டில் சமைத்தாலும் கவனம் தேவை..!

வீட்டில் மட்டன் சமைத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி ஒருவரின், தொண்டையில் இறைச்சி சிக்கியதால் , அவர் மூச்சுதினறி பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் செத்தலூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீப் இவரது மனைவி பாத்திமா ஹனான். 22 வயதான இவர் திருமணத்திற்கு பின்னர் மண்ணார்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்ட மேற்ப்படிப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் மட்டன் எடுத்து சமைத்த பாத்திமா ஹனான், அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இறைச்சி சற்று பருமனான அளவாக காணப்பட்டதால் தொண்டைக்குழியில் சிக்கி கொண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாக கூற்ப்படுகின்றது.

இதையடுத்து மாணவி பாத்திமாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது , அவரது தொண்டையில் சிக்கி இருந்த இறைச்சி மூச்சு குழாயை அடைத்துக் கொண்டதால் மூச்சுவிட இயலாமல் கடும் அவதிக்குள்ளான பாத்திமா பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் பாத்திமாவின் இறப்புக்கு பருமனான இறைச்சித்துண்டு தான் காரணமா ? அல்லது இறைச்சித்துண்டு கெட்டு போயிருந்ததா ? என்ற இரு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அண்மையில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறைச்சியால் மற்றொரு மாணவி உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments