நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்து.. குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

0 1695
நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்து.. குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சிதம்பரம் அடுத்த கூத்தன்கோயில் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில், நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சேலத்திலிருந்து டைல்ஸ் ஏற்றி வந்த மினி லாரி வேகமாக மோதியது.

இதில், மினி லாரியில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments