இரு சக்கர வாகனம் மீது டெம்போ ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு.. நெஞ்சை பதறச் செய்யும் விபத்தின் சிசிடிவி..!

0 4077
இரு சக்கர வாகனம் மீது டெம்போ ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு.. நெஞ்சை பதறச் செய்யும் விபத்தின் சிசிடிவி..!

கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் டெம்போ ஒட்டி வந்த ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி வெளியாகி உள்ளது.

குஞ்சாலுவிளையை சேர்ந்த சுரேஷ் மற்றும் மகன் விச்சு ஆகியோர் வெளியே சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருமனை நோக்கி வேகமாக சென்ற டெம்போ ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

பல அடி தூரத்திற்கு இருசக்கர வாகனமும் இழுத்து செல்லப்பட்டு டெம்போ அருகில் சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி நின்றுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து டெம்போவுடன் தப்ப முயன்ற ஓட்டுனர் டெம்போவை பின்னோக்கி இயக்கிய போது சாலையில் தூக்கி விசப்பட்ட அந்த இளைஞன் மீது மீண்டும் டெம்போ வாகனம் ஏறி இறங்கியது.

இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விச்சு என்ற இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் டெம்போவை அதன் ஓட்டுனர் பின்னோக்கி இயக்கி தப்ப முயன்ற போது அந்த இளைஞன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் டெம்போ ஓட்டுனர் உள்பட 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments