டெக்ஸாஸ் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு.. 18 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

0 1724
டெக்ஸாஸ் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு.. 18 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் சரமாரியாக சுட்டத்தில் 18 குழந்தைகள் மற்றும் ஆசிரியர் உள்பட மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

சுட்ட நபரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.பைக்கில் இருந்து இறங்கிய அந்த இளைஞன் ராப் தொடக்கப்பள்ளியில் கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் நுழைந்து சரமாரியாக சுட்டதில் பள்ளி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர் சனிக்கிழமை வரை அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்தார்.ஆசியப் பயணத்தில் இருந்து வாஷிங்டன் திரும்பியதும் ஜோபைடன் இச்சம்பவம் தொடர்பாக உரை நிகழ்த்த உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments