இவரு அட்வகேட்டா..? இல்ல அண்டர்டேக்கரா..? இளைஞரை அடித்து உதைத்த காட்சிகள்..!

0 2635
இவரு அட்வகேட்டா..? இல்ல அண்டர்டேக்கரா..? இளைஞரை அடித்து உதைத்த காட்சிகள்..!

நெல்லையில் இடம் தொடர்பான பிரச்சனையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது வழக்கறிஞர், எதிர் தரப்பை சேர்ந்தவரை மண்வெட்டியால் வெட்ட முயன்று சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

நெல்லை டவுன் மாதா மேல தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் சங்கர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப் பிரச்சனை இருந்து வருகிறது.

அந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கர் மற்றும் அவரது சகோதரி சண்முகசுந்தரி ஆகியோர் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி வந்துள்ளனர் .

இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரியின் மகன் விக்னேஷ், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டிடம் கட்ட கூடாது என்று கூறி வீட்டின் உள்பக்க கட்டுமானங்களை இடித்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து ஆவேசம் அடைந்த சங்கரின் வழக்கறிஞர் நவ்ஷாத் என்பவர் மண் வெட்டியை கொண்டு விக்னேஷை ஓங்கி வெட்டுவதற்காக பாய்ந்தார்.

முதற்கட்ட தாக்குதலில் இருந்து விலகிய விக்னேஷை மடக்கிப்பிடித்த நவ்ஷாத், மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்க அவரும் பதிலுக்கு தாக்கி உள்ளார்.

பின்னர் அங்கிருந்த விக்னேஷ் தரப்பு வழக்கறிஞர் அவரை சமாதனப்படுத்தி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கறிஞர் நவ்ஷாத் , 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments