சென்னை பாஜக பிரமுகர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை.. முன் விரோதம் காரணமாக வெறிச்செயல்..!

0 3230
சென்னை பாஜக பிரமுகர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை.. முன் விரோதம் காரணமாக வெறிச்செயல்..!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் ஒருவர் 6பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார். இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்று  பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்ற நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது.

இதில் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments