புதினுக்கு ரஷ்யா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி வேதனையுடன் கேள்வி

0 2635

ரஷ்ய வான் தாக்குதலால் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர், அதிபர் புதினுக்கு ரஷ்யா போதவில்லையா என உணர்ச்சி பெருக்குடன் கேள்வி எழுப்பும் காணொளி வெளியாகி உள்ளது.

டான்பாஸ் பகுதியில் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பக்முட் (Bakhmut) மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

மரியா என்ற 82 வயது மூதாட்டியின் வீட்டு சமையல் அறையில் வெடிகுண்டு ஒன்று விழுந்து வெடித்தது. பக்கத்து அறையில் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மூதாட்டி நூலிழையில் உயிர் தப்பினார்.

இடிபாடுகளுக்கு மத்தியில் வசித்து வரும் அந்த மூதாட்டி, தங்கள் செய்வது சரி தானா என ரஷ்யர்களை இறைவன் உணரச் செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments