அடுத்த 20-30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் இருக்கும்-பிரசாந்த் கிஷோர்

0 2466

அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் இருக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1990ஆம் ஆண்டு வரை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் காங்கிரஸ் கட்சியை சுற்றியே அரசியல் இருந்ததாகவும், இதேபோல் தான் தற்போது பாஜக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த 4 தசாப்தங்களாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெற்றி பெறவில்லை எனக்குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், அடுத்த சில ஆண்டுகளுக்கு தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது கடினமானது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments