பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் - முதலமைச்சர்

0 2383

நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வந்து கொண்டிருப்பதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு எடுத்துவரும் சமூக முன்னெடுப்புகளால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணவீக்கம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments