ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 8 பேர் கைது.. 120 சவரன் நகைகள் மீட்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 170 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவுடையார் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது நிஜாம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், முஹம்மது நிஜாமை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 170 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக 4 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து தற்போது வரை 120 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments