நீரில் மூழ்கிய ஹோண்டுராஸ் அகதிகள் படகு... கரை ஒதுங்கிய அகதிகளின் சடலங்கள்.!

0 1698

மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள வெராக்ரூஸ் மாகாணத்தில் 3 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மெக்சிகோ நோக்கி வந்த ஹோண்டுராஸ் அகதிகள் படகு நீரில் மூழ்கியதையடுத்து அந்த சடலங்கள் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயது குழந்தை உட்பட 4 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு கடற்கரையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் 4 பேர் மாயமாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதையடுத்து அவர்களை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments