கியானவாபி மசூதி பற்றிய ஆய்வறிக்கை மீது இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

கியானவாபி மசூதி பற்றிய ஆய்வறிக்கை மீது இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
வாரணாசியின் கியானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்திய பின் ஆய்வு தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக மாற்றப்பட்ட ஆணையர் அஜய் மிஸ்ராவின் அறிக்கை மீது இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இவ்வழக்கை உச்சநீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கின் ஆவணங்கள் மாவட்ட நீதிபதி ஏ.கே விஸ்வேஷ்வாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதிக்குள் வீடியோ படம் எடுத்து அளித்த ஆவணங்களின் தொகுப்பும் உள்ளது.
மசூதிக்குள் இந்து அடையாளங்கள், சின்னங்கள் இருப்பதாக அஜய் மிஸ்ராவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments