ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் பலி..!

0 1851
ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் பலி..!

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments