நிழல் உலக தாதா தாவூத்தின் கூட்டாளிகள் 4 பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை

0 1687
நிழல் உலக தாதா தாவூத்தின் கூட்டாளிகள் 4 பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை

குஜராத்தில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா தாவூத்தின் கூட்டாளிகள் 4 பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்த நான்கு பேருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அபுபக்கர், யூசுப் பாட்லா , ஷோயப் பாபா மற்றும் சையத் குரேஷி ஆகியோர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments