அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி பயங்கர விபத்து.. 2 பேர் பலி..!

0 2196
அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி பயங்கர விபத்து.. 2 பேர் பலி..!

அபுதாபியில் உள்ள உணவகத்தில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 120 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments