மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறப்பு..!

0 2112
மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறப்பு..!

காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ந்தேதி அன்று குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது நீர்மட்டம் 117அடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து இன்று திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments