குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு.. அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை..!

0 1409
குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு.. அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை..!

டோக்கியோவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் , சீனாவின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் தலைநகரம் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஜப்பானும் இந்தியாவும் இயல்பான நட்பு நாடுகள் என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்தோ பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்த அமெரிக்கா, ஜப்பான், நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான்,தென் கொரியா மற்றும் ஆசியான் நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகளில் இந்தியா முதல்நாடாக இடம் பெற்றது.

இந்தோ பசிபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த 13 நாடுகள் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. இந்தோ பசிபிக் நாடுகளுடன் இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, இந்த கூட்டமைப்பு இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் சுபிட்சத்தைக் கொண்டு வரும் என்று மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டமைப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் இணைந்த நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரத்திற்கும் தங்கள் எதிர்காலத்திற்குமான விதிமுறைகளை புதிதாக எழுதுகின்றன என்றார்.

இன்று குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர், சீனாவின் எல்லை அத்துமீறல், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments