"இஷ்டப்படி விதிகளை மீற வேண்டாம் - கஷ்டப்பட வேண்டி வரும்".. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

"இஷ்டப்படி விதிகளை மீற வேண்டாம் - கஷ்டப்பட வேண்டி வரும்".. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
சென்னை மாநகரில் தவறான திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆயிரத்து 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பெருநகரின் முக்கியமான 11 சந்திப்புகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானியங்கி முறையில் படமெடுக்கும் 15 அதிநவீன ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகனங்களின் விதிமீறல்களை துல்லியமாகப் படமெடுக்கும் இந்த கேமராக்கள் மூலம் கடந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து தற்போது வரை 17 ஆயிரத்து 994 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்துக் காவல்துறை, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரித்துள்ளது.
Comments