சிதம்பரம் நடராஜரையும் தில்லை காளியையும் இழிவு செய்த நபர்.. கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் ஆர்பாட்டம்..!

0 3172
சிதம்பரம் நடராஜரையும் தில்லை காளியையும் இழிவு செய்த நபர்.. கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் ஆர்பாட்டம்..!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜரை அவதூறாக சித்தரித்துப் பேசிய நபரை கைது செய்யக் கோரி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் என்ற அந்த நபர், சிதம்பரம் நடராஜரின் நடன பாவங்களையும் தில்லை காளியையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என வலியுறுத்தி, சிதம்பரம் நகரில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் ஒன்று கூடி தேவாரம், திருவாசகம் பாடி  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இந்து அமைப்புகள், கட்சிகள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments