கட்டுப்பாட்டை இழந்த சாலையோர புளியமரத்தில் மோதிய கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

0 3020
கட்டுப்பாட்டை இழந்த சாலையோர புளியமரத்தில் மோதிய கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

அரியாலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஐடி ஊழியரான கார்த்திகேயன், குடும்பத்துடன் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு அவரது Ford Figo காரில் சென்னை திரும்பினார். அப்போது தஞ்சாவூர் அரியலூர் சாலையில்  சாத்தமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில், காரை ஓட்டி வந்த கார்த்திகேயன், அவரது தாய் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்த்திகேயனின் இரண்டு மகள்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அசதியில் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments