ஆர்டர் செய்யப்பட்ட மூன்றரை டன் கெட்டுப்போன இறைச்சி.. சொமாட்டோ நிறுவனம்தான் பதிலளிக்க வேண்டும் - உணவு பாதுகாப்பு அதிகாரி..!

0 26076
ஆர்டர் செய்யப்பட்ட மூன்றரை டன் கெட்டுப்போன இறைச்சி.. சொமாட்டோ நிறுவனம்தான் பதிலளிக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்..!

 

சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணியின் சமையல் குடோனில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை ஒரத்தநாட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமைக்க சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனம் ஆர்டர் எடுத்தது. இதற்காக சொமேட்டோவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவின் மாண்டியாவை சேர்ந்த அல் ஜலில் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் வாங்கி டெலிவரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் வாங்கிய ஆடு, கோழி இறைச்சியில் பிரியாணி சமைத்தபோது துர்நாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த, ஆர்.ஆர் பிரியாணி உரிமையாளர், உணவு பாதுகாப்புத்துறையிடம் புகாரளித்தார்.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இறைச்சியை ஆய்வு செய்த அதிகாரி, சொமாட்டோ நிறுவனம் தான் இறைச்சி பற்றி பதிலளிக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments