கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய கல்லூரி மாணவர்கள்.. அறைக்குள் புகுந்து 5 செல்போன்களை அள்ளிச் சென்ற திருடன்..!

0 3260
கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய கல்லூரி மாணவர்கள்.. அறைக்குள் புகுந்து 5 செல்போன்களை அள்ளிச் சென்ற திருடன்..!

கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சிலர் தனியாக அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு காற்றோட்டத்துக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவன், திறந்திருந்த அறைக்குள் சென்று ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 5 செல்போன்களைத் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளான். தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், செல்போன் சிக்னலை வைத்து கேரளாவைச் சேர்ந்த கிரீஸ் என்பவனை கைது செய்தனர்.

கோவையில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே கல்லூரி மாணவர்களின் விடுதிக்குச் சென்று செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments