சாத்தூர் அருகே சிறுவன் இயக்கிய குடிநீர் வாகனத்தால் 2 வயது குழந்தை பரிதாப பலி..!

0 2079

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் ஒன்று 2 வயது குழந்தை மீது மோதியதில் அந்த குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

மேட்டமலையில் முத்துக்குமரவேல் - இந்திரா தம்பதியின் 2 வயது குழந்தை சோலை ராஜ் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது அவனை கவனிக்காமல் பின்னோக்கி இயக்கப்பட்ட குடிநீர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் குடிநீர் வாகனத்தை ஓட்டியவர் வீரபாண்டியபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்றும், அவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் தெரியவந்ததையடுத்து அவன் மீது வழக்கு பதிவு செய்து சாத்தூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments