வேறு நபரை காதலித்ததால் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவதுபோல் நாடகமாடிய மணப்பெண்.. செலவுத் தொகையைக் கேட்டு மணமகன் வீட்டார் சண்டை..!

0 3095
வேறு நபரை காதலித்ததால் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவதுபோல் நாடகமாடிய மணப்பெண்.. செலவுத் தொகையைக் கேட்டு மணமகன் வீட்டார் சண்டை..!

கர்நாடக மாநிலம் மைசூருவில் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவது போல் நாடகமாடி பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மைசூரு நகரிலுள்ள மண்டபம் ஒன்றில் மந்திரங்களை ஓதி முடித்து புரோகிதர் தாலியை மணமகன் கையில் கொடுத்த நிலையில் திடீரென மணப்பெண் மயங்கி விழுந்தார்.

பதறிப்போன உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.

அப்போது திடீரென கண் விழித்த பெண், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அதனாலேயே மயங்கியதுபோல் நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.

ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்ச்சிக்காக செலவு செய்த 5 லட்ச ரூபாயைக் கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் விசாரணையில் மணப்பெண் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments