கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததில் கல்லூரி மாணவி உயிரிழப்பு? உறவினர்கள் சாலை மறியல்

0 7111

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நொச்சி வயல் புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாலட்சுமி, கடந்த 12ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது, 3 மர்மநபர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி குளிர்பானம் குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments