தருமபுர ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

0 2181

தருமபுர ஆதீன குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு 11ம் நாள் திருவிழாவான ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேச விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. 

பல்வேறு தடைகளை கடந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆரவாரத்துடன்  சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments