அமெரிக்காவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று 2 வதாக வந்து வெற்றி கோட்டை தொட்ட நபர் திடீர் உயிரிழப்பு.!

0 2940

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற  Brooklyn Half Marathon போட்டியில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்ற நபர் வெற்றிக் கோட்டை தொட்ட நிலையில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த நபர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் போட்டியில்15க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 4பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போட்டி நடைபெறும் சமயம் மோசமான காலநிலை இருக்கும் என்று அமைப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், கடும் வெப்பம்  ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தியதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments