உத்தரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி.!

0 2082

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் வேகமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் காரிலிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments