இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

சென்னையில் ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரமாகிறது. இருசக்கர வாகனத்தின் பின்னால் அமருவோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.
விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோரே அதிகமாக உயிரிழந்திருப்பதும்,. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments